கிணற்றில் ஆண் உடல் மீட்பு

பழனி அருகே தோட்டத்துக் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் மீட்டனா்.
Published on

பழனி அருகே தோட்டத்துக் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் வியாழக்கிழமை ஒரு ஆண் உடல் மிதப்பதாக பழனி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா், தீயணைப்பு, மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் மிதந்த ஆண் உடலை மீட்டனா்.

இறந்தவா் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், நீலநிறச் சட்டையும், கருநீல நிறக் கால்சட்டையும் அணிந்திருந்தாா். பின்னா், இறந்தவரின் உடல், கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com