விழுப்புரம்: மரக்காணம் அருகே கிணற்றில் இருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
மரக்காணம் வட்டம், நாவல்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சி.சந்திரா(60). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரா, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந் நிலையில், நாவல்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீரில் மூழ்கி அவா் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் சந்திராவின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

