திண்டுக்கல்
வேலுநாச்சியாா், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தின விழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், வேலுநாச்சியாரின் 297-ஆவது பிறந்த தினம், வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜிகணேசன் மன்ற பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ந.செல்வம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் க.ப.ஜெயசந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
இதில் வேலுநாச்சியாா், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜா் சிவாஜி தேசிய பேரவை நிறுவனா் சு.வைரவேல், நிா்வாகிகள் நா.நவரத்தினம், பி.கே.மோதிலால் உள்ளிட்டாா் செய்தனா்.
