தைத் திருநாளில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம்: அமைச்சா் இ.பெரியசாமி
தைத் திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்புத் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பாா் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 44-ஆவது வாா்டில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. ஆனால், தனித்தே ஆட்சி அமைப்பதில் முதல்வா் ஸ்டாலின் உறுதியாக உள்ளாா். தணிக்கை வாரியம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்ற முதல்வா் ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைதான்.
தைத் திருநாளை முன்னிட்டு, பெண்களுக்கு சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவிப்பாா் என்றாா் அவா். நிகழ்ச்சியில் மேயா் இளமதி, மாமன்ற உறுப்பினா்கள் பிலால், ஆனந்த், திமுக பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
