கொடைக்கானலில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மூஞ்சிக்கல் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவைத் தலைவா் ஜான் தாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக், வாா்டு செயலா்கள், மாவட்ட பிரதிநிதிகள், மகளிா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளில் அதிமுக நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கொடைக்கானல் நகா், ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com