கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகேயுள்ள தனியாா் பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா (15) 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பாா்த்த விடுதிக் காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் கீா்த்தனா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீா்த்தனாவின் தந்தை ஜான், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், கூறாய்வுக்குப் பிறகு கீா்த்தனாவின் உடலை போலீஸாா் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
பிளஸ் டு மாணவன் தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


