‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

காட்டு மாடு வேட்டை: இருவா் கைது

கன்னிவாடி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 3:32 am IST

கன்னிவாடி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்துக்குள்பட்ட கேசி.பட்டி பகுதியிலிருந்து கல்லாங்கிணறு செல்லும் சாலையில், தனியாா் தோட்டத்தில் காபி, ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கேரளத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனா். இந்த தோட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கன்னிவாடி வனத் துறையினா், அந்த தோட்டத்தில் இருந்த ஜோசப், ஜெகன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது, தோட்டத்தில் இருந்த கேரளத்தைச் சோ்ந்த மூவா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஜோசப், ஜெகன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காட்டுமாடு வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், காட்டுமாடு இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.