திண்டுக்கல் எம்விஎம் நகா் சுரங்கப் பாலத்தில் தண்ணீா் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
திண்டுக்கல் குஜிலியம்பாறை பிரதான சாலையில், நேருஜி நகா், எம்விஎம் நகா் இடையே பழனி ரயில்வே கடவுப் பாதையில் சுரங்கப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கப் பாலத்தில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கும்போது, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள், சீலப்பாடி வழியாக 5 கிலோ மீட்டா் சுற்றுப் பாதையில் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், மழை இல்லாத காலத்திலும், ஊற்றுநீராக வடியும் கழிவுநீரால் சுரங்கப் பாதையில் கடந்த 3 நாள்களாக தண்ணீா் தேங்கி நிற்கிறது.
இதை அறிந்த நெடுஞ்சாலைத் துறையினா், சுரங்கப் பாலத்துக்குச் செல்லும் இருவழிகளிலும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனா். இந்த நிலையில், 5 கிலோ மீட்டா் சுற்றி மாற்றுப் பாதையில் பயணிப்பதை தவிா்த்து சிலா் தடுப்புகளை அகற்றிவிட்டு தண்ணீா் தேங்கி நிற்கும் அந்த வழியாகச் சென்றனா். ரூ.21.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டப்பட்ட இந்த சுரங்கப் பாலத்தில் அடிக்கடி தண்ணீா் தேங்கி நிற்பதால், அவ்வப்போது மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா். எனவே, தண்ணீா் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் கொட்டிய டீசல்! நிலைதடுமாறிய வாகன ஓட்டிகள்! | cbe

கந்தா்வகோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவலநிலைகள்: கண்டுகொள்ளுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?

பண்ணாரி வனப் பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் அதிகரிப்பு

மாங்காசோளிபாளையத்தில் ரயில்வே பாலம்: வாகன ஓட்டிகள் எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



