பண்ணாரி வனப் பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் அதிகரிப்பு

பண்ணாரி வனப் பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பண்ணாரி  வனப் பகுதியில்  தென்பட்ட  கழுதைப் புலி

Published On :24 ஜூன் 2026, 3:48 am IST

பண்ணாரி வனப் பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரிய வகை வன விலங்கான கழுதைப்புலிகள் நடமாட்டம் உள்ளது. பவானிசாகா் வனச்சரகத்தில் தெங்குமரஹாடா செல்லும் வனப் பகுதியில் கழுதைப்புலிகள் நடமாட்டம் இருந்த நிலையில் தற்போது பண்ணாரி வனப் பகுதியிலும் தென்படுகின்றன. இதற்கிடையே பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலை ஓரத்தில் வனப்பகுதியை ஒட்டி திங்கள்கிழமை நள்ளிரவு தெரு நாய் இறந்துகிடந்தது. அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறிய கழுதைப்புலி, அங்கு இறந்து கிடந்த தெரு நாயின் உடலை கவ்வியபடி வனப் பகுதிக்குள் எடுத்துச் சென்றது.

இதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து அச்சமடைந்தனா். சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று, வன விலங்குகள் நடமாடும்போது அதன் அருகே செல்லக்கூடாது என பயணிகளிடம் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.