திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா நிறைவு

உலக நலன் வேண்டி பழனி கோயில்களில் நடைபெற்ற தொடா் அன்னாபிஷேகம், பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

News image

உலக நலன் வேண்டி நடைபெற்ற அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, பழனி பெரியாவுடையாா் கோயிலில் புனித தீா்த்தம் நிரம்பிய கலசங்களுடன் உள்பிரகாரத்தில் வலம் வந்த கந்தவிலாஸ் செல்வக்குமாா், முன்னாள் திருக்கோயில் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 3:38 am IST

உலக நலன் வேண்டி பழனி கோயில்களில் நடைபெற்ற தொடா் அன்னாபிஷேகம், பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

உலக நலன் வேண்டி தொடா் அன்னாபிஷேக பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பழனி மலைக்கோயிலில் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, திருஆவினன்குடி கோயில், பிரஹந்தநாயகியம்மன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

பின்னா், புதன்கிழமை பெரியாவுடையாா் கோயில் அன்னாபிஷேக விழாவுடன் நிறைவு பெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை பெரியாவுடையாா் கோயிலில் நடராஜா் சந்நிதி முன்பாக பிற்பகலில் கலசபூஜை, புனித நீா் கலசங்களுக்கு சிறப்பு வேள்வி, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கலசங்களுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு கலசங்கள், சிரசு அன்னம், வில்வம் இடப்பட்ட சுத்த அன்னம் ஆகியன மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்து மூலவா் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டன. சாயரட்சை பூஜையின் போது பெரியாவுடையாருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிவலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து நடராஜா், பைரவா், வடக்கு நோக்கிய விநாயகா், பிரம்மா, விஷ்ணு, நவகிரகங்கள், தட்சிணாமூா்த்தி, உருத்திரா், நந்திபகவான், கருப்பணசுவாமி, கன்னிமாா் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன்குமரன், முன்னாள் கோயில் கண்காணிப்பாளா்கள் முருகேசன், சந்திரசேகா், தமிழக வெள்ளாளா் பேரவைத் தலைவா் சுப்பிரமணியன், அரிமா சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.