காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமேதாா் மேடு கிராமத்தில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜமேதாா்மேடு கிராமத்தில் மழை வேண்டியும், மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, ஜமேதாா் மேட்டில் உள்ள முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயில் மற்றும் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயில்களுக்கு பெண் பக்தா்கள், மாவிளக்குடன் ஊா்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினா்.
இந்த நிகழ்வில் காவேரிப்பட்டணம், சந்தாபுரம், ஜமேதாா்மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வஞ்சியர் அழ, வானமும் அழுதது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



