தொடர்ந்து மழை வராமல் இருந்தால், வருண பகவானை வேண்டி, 'கழுதைகளுக்குக் கல்யாணம்', 'சிறப்பு யாகம்' ... என்று நூதன முறையில் வழிபாடுகளை நடத்துவார்கள். ஆனால், வன்னியநாதபுரம் எனும் கிராமத்தில் பெண்களோ ஜூலை 10-இல் ஒன்றுகூடி கண்ணீர்விட்டுக் கதறி அழுது, ஒப்பாரி வைத்தனர்.
'கிளிசரினை கண்களில்விட்டு கண்ணீர் வரவழைப்பது திரைத்துறையில் நடப்பது சகஜம். நிஜத்திலோ பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதது சமூக ஊடகங்களில் வைரலானது. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மாதனூர் ஒன்றியத்தில் மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னியநாதபுரம் கிராமத்தில்தான் இந்த நூதன வழிபாடு நடைபெற்றது.
'மழைக்காக ஒப்பாரி வழிபாடு நடத்துவது நூறு ஆண்டுகளைக் கடந்து நடைபெறும் எங்களுடைய ஊர் வழக்கம்' என்கிறார் வன்னியநாதபுரம் ஊர் நாட்டாண்மை ம. நாராயணன்.
அவரிடம் பேசியபோது:
'எங்களுடைய முன்னோர் காலத்திலேயே ஒப்பாரி வழிபாடு இருந்து வந்துள்ளது. மழை வராமல், குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்போது மழைக்காக இந்த ஒப்பாரி வழிபாடு நடத்துவார்கள். முன்னொரு காலத்தில் தொடர்ந்து
5 ஆண்டுகளாக மழை வராமல் கடும் பஞ்சம் ஏற்பட்டதாகவும், அப்போது தான் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்த தொடங்கியதாக முன்னோர் கூறியுள்ளனர். கழுதை, தவளை திரு
மணம், ஒப்பாரி வழிபாடு ஆகியன முக்கிய வழிபாடுகளாக இருந்து வந்துள்ளது.
அந்த வழிபாடு நடத்தி முடித்த சில நாள்களில் மழை பெய்ததால், பஞ்சம் ஏற்படும்பொதெல்லம் இதுபோன்ற வழிபாடுகளை நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
தற்போது ஜூலை மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மழையும் சரிவர பெய்யவில்லை. அதனால் பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எங்கள் கிராமத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. பயிர்கள் காய்ந்து வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
எனவே, முன்னோர் வழக்கப்படி ஊரில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. வன்னியநாதபுரம் கிராமத்தில் பெண்கள் பங்கேற்ற ஒப்பாரி வழிபாடு நடத்தப்பட்டது.
கிராமத்தின் முக்கிய தெருக்களில் பெண்கள் ஊர்வலமாகச் சென்று கிராம தேவதைக்கு சிறப்பு பூஜை செய்து, முக்கிய சந்திப்பில் கற்பூரம், நெருப்பு ஏற்றி வைத்து, அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டும், நின்றுகொண்டும் ஒப்பாரி வைத்தனர். பின்னர், அவர்கள் மழை வேண்டி வழிபாடு செய்தனர். இந்த நேரத்தில் பெண்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடியதுடன், இயற்கை வளம், நிலத்தடி நீர் பெருகி, விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டினர்.
ஒப்பாரி வழிபாடு நடத்தப்பட்டதற்கு மறுநாள் (ஜூலை 11) காலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டபோதிலும், மாலையில் ஆம்பூர், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது எங்களுடைய வழிபாட்டுக்கு கடவுள் செவி சாய்த்துள்ளார் என்பதை உணர்த்துகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியே!' என்கிறார் நாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

மழை பெய்ய வேண்டி முகத்தில் கரியை பூசிக்கொண்டு கொல்லிமலை பழங்குடியின மக்கள் விநோத வழிபாடு

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

மழைவேண்டி சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



