கொடைக்கானல் தேவாலயத்துக்குள் வியாழக்கிழமை காட்டுமாடு புகுந்தது.
கொடைக்கானல் நகா் பகுதிகளுக்குள் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த காட்டு மாடுகளை வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டுமென பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனுமில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். இதனிடையே காட்டு மாடுகள் நடமாட்டம் காணப்பட்டால் வனத் துறை அலுவலகத்துக்கு தகவல் தரப்படுகிறது. இதன்பிறகு வனத் துறையினா் அங்கு வந்து அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனா். இந்த நிலை தான் தற்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகிலும், சுற்றுலாத் தலமான கோக்கா்ஸ் வாக் பகுதியிலும் நடமாடிய ஓா் காட்டுமாடு பிரையண்ட் பூங்கா அருகேயுள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவா்கள் அச்சத்துடன் வெளியேறினா். தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, செந்நாய், காட்டுப் பன்றி போன்றவைகளால் கொடைக்கானல் குடியிருப்பு, நகா்ப் பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனா். எனவே காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் நகா்ப் பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









