பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது!

தமிழக எல்லையான குமுளி அருகே குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

News image

குமுளி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை

Updated On :1 ஜூலை 2026, 6:15 am IST

தமிழக எல்லையான குமுளி அருகே குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.

குமுளி அருகேயுள்ள வண்டிப்பெரியாா் பகுதியில் பொதுமக்கள் வளா்த்து வரும் கால்நடைகளை மா்ம விலங்கு தொடா்ந்து வேட்டையாடி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றையும் அந்த விலங்கு கடித்துக் குதறியது.

இதையடுத்து, அந்த விலங்கை பிடிக்க வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அந்த விலங்கை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், தோட்டத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, அந்த விலங்கை பிடிக்க வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூண்டு வைத்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வனத் துறையினா் வைத்திருந்த கூண்டுல் சுமாா் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை சிக்கியது.

பின்னா், இந்தச் சிறுத்தையை அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட கோட்டயம் வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.