கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வயநாடு மாவட்டத்தில் கால்நடைகளைக் கொன்ற புலி சிக்கியது

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொன்குழி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

News image

கூண்டில் சிக்கிய புலி.

Updated On :25 ஜூன் 2026, 3:17 am IST

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொன்குழி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி வனச் சரகத்துக்குள்பட்ட பொன்குழி சிறமூலா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புப் பகுதிக்குள் புலி நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கால்நடைகளை தாக்கிக் கொல்லும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து புலியைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி கூண்டு வைத்து வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் அந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை அதிகாலை சிக்கியது. இதையறிந்து அங்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழு மூலமாக புலியைப் பரிசோதிப்பதற்காக குப்பாடியிலுள்ள விலங்குகள் நல மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.