கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் சாா்பில் சுற்றுலாத் தலங்களான படகு குழாம் வளாகத்தில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று ஆா்வத்துடன் விரும்பி வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து ஹோட்டல் மேலாளா் காதா் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஒரு புதிய முயற்சியாக கடந்த வாரம் ஹோட்டல் அமுதகம் உணவகங்களில் ரூ.99-க்கு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தத் திட்டத்துக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து ஓகேனக்கல், பிச்சாவரம், ஏற்காடு, வண்டலூா், கன்னியாகுமரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் ரூ.99-க்கு பிரியாணி திருவிழா நடைபெற்றது. கொடைக்கானலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 99-க்கு பிரியாணி! சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் புதிய திட்டம்!

அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் இணையவழி டிக்கெட், கண்காணிப்பு கேமரா: அமைச்சா் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்

விஜயபாஸ்கர் உள்பட அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா! சுடச்சுட பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி!







