ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விஜயபாஸ்கர் உள்பட அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா! சுடச்சுட பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி!

விஜயபாஸ்கர் உள்பட அதிமுகவினர் தவெகவில் இணையும் விழாவில், சுடச்சுட சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

Chicken Briyani

சிக்கன் பிரியாணி - from video grab

Published On :2 ஜூலை 2026, 12:44 pm IST

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் தவெகவில் இணையும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று காலையிலேயே மாமல்லபுரம் தனியார் விடுதியில், நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளிலும், மாவட்டங்களில் இருந்தும் வந்தவர்களுக்கு காலை உணவு சுடச்சுட பரிமாறப்பட்டுள்ளது.

தவெக இணைப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கானோரும், எந்த இடிபாடுகளும் இல்லாமல் முண்டியடித்துக் கொண்டு வாங்குவது போல அல்லாமல் பல மேஜைகள் போடப்பட்டு உணவு வழங்கப்பட்டது. காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, சாம்பார், இனிப்பும் வழங்கப்பட்டது.

மதியம் 12 மணியளவிலேயே, மதிய உணவும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள். சுடச் சுட சிக்கன் பிரியாணி, முட்டை, தயிர் பச்சடி, கறிக் குழம்பு என பல மேஜைகள் வைத்து அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான இருக்கைகளில், விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட பையில், தண்ணீர் பாட்டில், தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. தவெக துண்டும் வைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனா்.

ஏற்னவே தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனா்.

இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளா்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தனர்.

இவர்களுடன் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தவெகவில் இணைந்தவர்களை வரவேற்று உரையாற்றினர்.

Summary

Vijayabhaskar AIADMK members join TVK hot chicken biryani served

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.