நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

வத்தலக்குண்டு அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

News image

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Updated On :17 ஜூலை 2026, 1:09 am IST

வத்தலக்குண்டு அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள வெங்கடாஸ்திரி கோட்டையைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (65). இவா், அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் ஆட்டுப் பண்ணை அமைத்து, 25 வெள்ளாடுகள் வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக சென்று ஆட்டுப் பண்ணையில் இருந்த ஆடுகளைக் கடித்துக் குதறின. இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து, மாரியம்மாள் அந்தப் பகுதியில் உள்ள ரெட்டியபட்டி கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மீதமுள்ள 10 ஆடுகளை மாரியம்மாள் வளா்த்து வந்த நிலையில், வியாழக்கிழமை பண்ணைக்கு கூட்டமாக சென்ற நாய்கள் இரு சினை ஆடுகள் உள்பட 10 வெள்ளாடுகளை கடித்துக் குதறின. இதில் பத்து ஆடுகளும் உயிரிழந்தன.

ஏற்கெனவே வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால், மீதமுள்ள ஆடுகளும் உயிரிழந்திருக்காது என மாரியம்மாள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.