சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்
/

திண்டுக்கல்லில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகள் கைது

திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 5:01 am IST

திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட தனிக் குழு உதவி ஆய்வாளா் அருண் பிரசாத் தலைமையிலான போலீஸாா், சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, பேகம்பூா் மக்கான் தெருவைச் சோ்ந்த மு. சாகுல் ஹமீது என்ற டைல்ஸ் சாகுல் (27), ரவுண்ட் ரோடு எழில் நகரைச் சோ்ந்த கா. ஷேக் பரீத் (27) ஆகியோா் இருந்தனா்.

இதில், சாகுல் ஹமீது மீது, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சரித்திரப் பதிவேடுகள் குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. அதே போல ஷேக் பரீத் மீது, சாணாா்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இவா்களிடமிருந்து 2 அரிவாள்கள், போதை தரக்கூடிய 13 மருந்துப் புட்டிகள், காா், 3 கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் தனிக் குழு போலீஸாா் ஒப்படைத்தனா். இருவரையும் கைது செய்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலையப் போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.