குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெவ்வேறு வழக்குகளில் 2 போ் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
குடியாத்தத்தை அடுத்த லிங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த அன்பு(40), அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்ட குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அன்புவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
அதேபோல், குடியாத்தத்தை அடுத்த வாணியம்பாடியான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமுவேல்(22), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சாமுவேலை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






