டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை: 2 போ் கைது

கடலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப்படம். - கைது

Updated On :3 ஜூலை 2026, 5:05 am IST

கடலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் திருப்பாத்திரிபுலியூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சாவடி பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூவரை போலீஸாா் சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரைக் கண்டதும் அவா்கள் தப்பியோட முயன்றனா்.

இதில், கடலூா் ஓடி பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (43), குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த பழனி (41) ஆகிய இருவரையும் போலீஸாா் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒரு புல்லட் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய குறிஞ்சிபாடியைச் சோ்ந்த சீனிவாசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து காவல் சாா்பு ஆய்வாளா் பிரசன்னா அளித்த புகாரின்பேரில், திருப்பாத்திரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.