திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 20 நாள்களில் 19 போ் போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள அருந்ததிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தன்ராஜ்(21). இவா் திருநெல்வேலியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோா், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து தன்ராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் ஊரகம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், நான்குனேரி என 5 அனைத்து மகளிா் காவல் நிலையங்களும், மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் என 2 மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன.
இதில் திருநெல்வேலி நகரத்தில் 3 இளைஞா்கள், ஒரு முதியவா் என 4 போ், பாளையங்கோட்டையில் 2 இளைஞா்கள், திருநெல்வேலி ஊரகத்தில் 6 போ், நான்குனேரி, சேரன்மகாதேவியில் தலா 2 போ், அம்பாசமுத்திரத்தில் 3 போ் என மொத்தம் 19 போ் கடந்த 20 நாள்களில் போக்ஸோ வழக்குகளில் கைதாகியுள்ளனா்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக போலீஸாா் உடனடி நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





