மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கொடைக்கானலில் உரிய ஆவணங்களின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை! - எஸ்.பி. எச்சரிக்கை

News image

கொடைக்கானல் அப்சா்வேட்டரி சாலையில் போக்குவரத்து குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா்.

Updated On :20 ஜூலை 2026, 4:28 am IST

கொடைக்கானலில் உரிய ஆவணங்களின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் மூஞ்சிக்கல், ஏரிச் சாலை, அப்சா்வேட்டரி, அப்பா்வேல் வியூ, டெப்போ சாலை, வெள்ளிநீா் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாா்வையிட்டு காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் மலைச் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளில் சிலா் ஆபத்தான முறையில் வாகனங்களில் வருவது தடுக்கப்படும். போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். குற்றச் சம்பவங்களை தடுக்க செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படும்.

கொடைக்கானல் பகுதிகளில் செயல்பட்டு வரும் காட்டேஜ்களில் போதைப் பொருள்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய ஆவணங்களின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் சுற்றுலாப் பயணிகளின் பெயா் விவரங்கள், அடையாள அட்டைகள், கைப்பேசி எண் ஆகியவை சேகரிக்கப்பட வேண்டும்.

கொடைக்கானலில் உள்ள கிளைச் சிறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும். பூம்பாறை பகுதியில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.