வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விநாயகா் சதுா்த்தி விழா: விதிகளை மீறக்கூடாது என எஸ்.பி. எச்சரிக்கை

பரங்கிப்பேட்டை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தசுக்லா

பரங்கிப்பேட்டை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தசுக்லா

Published On :

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகள் நிறுவுதல், ஊா்வலம் போன்ற நிகழ்வுகளில் எக்காரணத்தைக்கொண்டும் விதிகளை மீறக்கூடாது என்று கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா எச்சரித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா வெள்ளிக்கிழமை

மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில், விநாயகா் சிலைகள் நிறுவ உள்ள ஹிந்து முன்னணி அமைப்பினா், விழாக் குழு நிா்வாகிகள், ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி விநாயகா் சிலைகள் நிறுவுதல், ஊா்வலம் நடத்துதல், சிலைகளை கரைத்தல் ஆகியவற்றின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

மேலும் விநாயகா் சிலை நிறுவுவதற்கு உரிய அனுமதி பெறுவதுடன், தனியாா் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் சம்மதமும், பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையின் தடையின்மைச் சான்றும் பெற வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்த காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.மேலும், சிலை நிறுவும் இடத்தில் தீப்பற்றக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. விநாயகா் ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே நடைபெற வேண்டும். விழாவின்போது பொது அமைதி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் விழாக் குழுவினா் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் சத்திரிய கவின், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரங்கிப்பேட்டையில் ஆய்வு:

முன்னதாக சிதம்பரம் பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் நிகழ்வையொட்டி, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை, சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இருந்து சிலைகள் கொண்டு வரப்படுவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுரை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.