
கடலூரில் காவலா் தினம்: நினைவுத்தூணுக்கு எஸ்.பி. மரியாதை

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணில் மலா் தூவி மரியாதை செலுத்திய எஸ்பி., விவேகானந்த சுக்லா.
காவலா் தினத்தை முன்னிட்டு,கடலூா் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தமிழ்நாடு காவலா் நாள் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. பொது மக்களின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இரவும் பகலும் அயராது உழைக்கும் காவல் துறையினரைப் பெருமைப்படுத்தல் இந்நாளின் நோக்கம் ஆகும்.
அதன்படி, கடலூா் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலா் தின நிகழ்வில், கடலூா் காவா் கண்காணிப்பாளா், விவேகானந்த சுக்லா பங்கேற்று, இங்குள்ள நினைவுத் தூணிற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதை தொடா்ந்து எஸ்பி., தலைமையில் காவல் துறையினா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
பின்னா், ஆயுதப்படை காவலா்களின் மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா். இந்த நிகழ்வையொட்டி காவலா்கள் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆயுதப்படை காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எஸ்பி., விவேகானந்த சுக்லா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






