கொடைக்கானல்-வத்தலகுண்டு-பழனி மலைச் சாலைகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களில் வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானலை அடுத்த உகாா்த்தேநகா், சீனிவாசபுரம், புலிச்சோலை, லாஸ்காட் சாலை, பெருமாள் மலை, பிரதான சாலையான வத்தலகுண்டு-பழனி மலைச் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தச் சாலைகளை சீரமைக்கக்கோரி, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்துள்ள இந்தச் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதற்கு சாலையோரத்தில் செல்லும் வாய்க்கால்களை தூா்வாரததால் மழைநீா், கழிவுநீா் தேங்குவதால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. முன்பு தினசரி மலைச் சாலைகளிலுள்ள வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெறும். தற்போது, அந்தப் பணிகள் நடைபெறாததால் மலைச் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, இந்தச் சாலையோரங்களில் செல்லும் வாய்க்கால்களை தூரவார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திப்பணம்பட்டி தண்ணீா் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சுப்பராயபுரம்-முதலூா் தருமாபுரி சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



