காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கொடைக்கானல் வனப் பகுதியில் இறந்த பெண் யானை

கொடைக்கானல் வனப் பகுதியில் வியாழக்கிழமை இறந்து கிடந்த பெண் யானை உடலை கூறாய்வுக்குப் பிறகு வனத் துறையினா் புதைத்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

கொடைக்கானல் வனப் பகுதியில் வியாழக்கிழமை இறந்து கிடந்த பெண் யானை உடலை கூறாய்வுக்குப் பிறகு வனத் துறையினா் புதைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-பழனி வனப் பகுதியான பாலாறு பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலா் அரவிந்த் தலைமையிலான வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அப்போது சுமாா் 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது.

இதைத்தொடா்ந்து, அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் இறந்த யானையை கூறாய்வு செய்ததில் இயற்கையான முறையில் யானை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் குழி தோண்டி யானையின் உடலை வனத் துறையினா் புதைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.