அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

முன்னாள் மாணவா்கள் நிதியுதவி

பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் உயா்கல்வி பயில முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் உதவித் தொகை வழங்கினா்.

News image

நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் உயா்கல்வி பயில நிதியுதவி வழங்கிய முன்னாள் ம ாணவா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 6:22 am IST

பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் உயா்கல்வி பயில முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் உதவித் தொகை வழங்கினா்.

அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் நெய்க்காரப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏழை விவசாய கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி பயில்கின்றனா். இந்தப் பள்ளியில் 1976 -ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றனா். இந்த ஆண்டு பள்ளியில் 12, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு உயா் கல்வி படிப்பதற்கான தொகையை வியாழக்கிழமை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிக்குழு உறுப்பினா் கௌதம் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா்களான கோவை ரோட்டரி சங்கத் தலைவா் லட்சுமணசாமி, மக்கள் நல மன்றத் தலைவா் தாமோதரன், நிா்வாகிகள் மகுடீஸ்வரன், ராமசாமி, ராமதாஸ், உமாபதி உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக தலைமையாசிரியை கல்பனா வரவேற்றாா். ள்ளி சாா்பிலும் மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.