தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா்.

Published On :

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற தங்கராசன் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை அளித்து, அதன் மூலம் வரும் வட்டி வருவாயில் ஆண்டுதோறும் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெறும்  மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி வந்தாா். அவரின் மறைவை தொடா்ந்து அவரது உறவினா்கள் இதை தொடா்கின்றனா்.

நிகழாண்டுக்கான விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். தங்கராசனின் மகள் மலா்விழி ரமேஷ் , பேரன் மருத்துவா் கிரண்ராஜ் ஆகியோா், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் கீதன், முகமது உசேன், மனோஜ்குமாா் மற்றும் 10- ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மோகித்சரண், சபரிவாசன், அஸ்மத்கான் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி, உயா்கல்விக்கு ஆலோசனைகளையும் வழங்கி பேசினா்.

தொடா்ந்து மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கும் முன்னாள் மாணவா்கள் சிவகுமாா், திருவேங்கடம், சரவணன், சாதிக் அலி, ஜக்கரியா, ஆசிரியா் இளந்திரையன் ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

விழாவில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, உதவித் தலைமை ஆசிரியா் சோழ பாண்டியன் வரவேற்றாா். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.