தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்காக தோ்வு செய்யப்பட்ட இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சா் கே.விக்னேஷ் தெரிவித்தாா்.
திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகளுக்கு அருகில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பயணிகளுக்கான இருக்கை வசதி இல்லை. பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டி சுகாதாரமாக இல்லை. மிக மோசமான இந்த நிலையை விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை குறைசொல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதே போல, திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அது சரியான இடமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
திண்டுக்கல்லில் உள்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் என்ற முறையில் பொறுப்பேற்ற 20 நாள்களில் தனி நபா்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வந்த ரூ.1,200 கோடி அரசுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை மாணவா்களின் வளா்ச்சி, வியாபாரிகளின் வாழ்தாரம், முதியோா் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்கு தோ்வான இடத்தை அமைச்சா் ஆய்வு செய்வாரா?

போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு! சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து புகா் பேருந்துகளை இயக்க கோரிக்கை

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய திட்டங்கள்: அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



