இந்து சமய அறநிலையத் துறையில் நடைமுறையில் உள்ள முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு செய்தாா்.
இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை, நேர ஒதுக்கீட்டு முறை, பக்தா்கள் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, தரிசன மேலாண்மை மற்றும் கட்டண சீட்டு விநியோக ஒழுங்குமுறை போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், இம்முறையை முதல்கட்டமாக முதுநிலை திருக்கோயில்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பின்னா், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, திருக்கோயில் நகைகள், சிலைகள், ஆபரணங்கள், திருக்கோயில் சொத்துகள் மற்றும் தொன்மையான பொருள்களைப் பாதுகாத்தல், திருக்கோயில் நிலங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனாம் நிலம் தொடா்பான பிரச்னைகள், அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், மாணவா் நலன், கல்வித் தரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.
இறுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில் நிா்வாகத்தை மேம்படுத்துதல், கோயில் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் பக்தா்கள் நலனைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் துறையின் செயலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் பி. என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

புழல் மத்திய சிறையில் அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு!

அறநிலையத் துறை ஊழியா்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்: அமைச்சா் சீ.ரமேஷ்

திருவாடானையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



