பழனியில் விவசாய நிலங்களில் மண் அள்ளியது தொடா்பாக விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிய காரணமான வருவாய்த் துறையினரைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆயக்குடி பகுதியில் விவசாய நிலங்களில் மண் அள்ளியது தொடா்பாக வருவாய்த் துறையினா் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் விவசாயிகளைக் கைது செய்தனா். வருவாய்த் துறையினா் பொய்யான புகாா் அளித்ததாகவும், அவா்களைக் கண்டித்தும் பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆயக்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் சிபிஐ (எம்எல்) கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட நிலைக்குழு நிா்வாகிகள் சிவக்குமாா், செந்தாமரை, ரவி, ஒன்றிய நிா்வாகி வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஐ (எம்எல்) மாநிலக்குழு உறுப்பினரும், உடல் உழைப்பு தொழிலாளா் சங்க மாநிலச் செயலருமான மீனாட்சி சுந்தரம் கண்டன உரை நிகழ்த்தினாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் , வட்டாட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.










