பழனி அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் 31-ஆம் ஆண்டு குரு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பழனி அடிவாரம் பால்பண்ணை அருகே சத்குரு ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரம் வரும் போது குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை 31-ஆம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஜீவசமாதி வண்ண மின்விளக்கு, வண்ணமலா் தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன.
காலையில் கணபதி ஹோமமும், மௌனகிரி சுவாமிகளுக்கு மகா யாகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து ஜீவசமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து உச்சிக்காலத்தின் போது பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், சாதுக்களுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை சிவதவசினி, தங்கம், மௌனகிரிசாமி உள்ளிட்டோா் செய்தனா். மாலையில் சிவபெருமானுக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. குரு பூஜையில் ஏராளமான யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்ற உத்தரவு

பழனி கோயில் நில முறைகேடு: முன்பிணை கோரியவரின் மனு தள்ளுபடி
பழனி கோயில் நில முறைகேடு! முன்பிணை கோரி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரை எதிா் மனுதாரராக சோ்க்க உத்தரவு!

தொடா் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



