சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காந்தி காய்கனிச் சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் காந்தி காய்கனி சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திண்டுக்கல்லில் காந்தி காய்கனி சந்தை முன் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடையை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதன் உரிமையாளா்.

Updated On :11 ஜூன் 2026, 1:14 am IST

திண்டுக்கல் காந்தி காய்கனி சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான காய்கனிச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், சுமாா் 150 கடைகளில் மட்டுமே வியாபாரிகள், காய்கனிகள் உள்ளிட்ட விளை பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். அதே நேரத்தில், காய்கனிச் சந்தைக்கு வெளியே 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரமாகக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, காய்கனிச் சந்தைக்கு எதிரே அமைந்துள்ள நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை தடுப்பாக பயன்படுத்தி, பல வியாபாரிகள் நிரந்தரக் கடைகள் அமைந்துள்ளனா். காந்தி காய்கனி சந்தை முதல், மேற்கு ரதவீதி சந்திப்பு வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், சந்தைக்குச் செல்லும் பொதுமக்கள்

தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு, ஆக்கிரமிப்புக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி உறுதியாக நடைபெறும் என்றும், காந்தி காய்கனிச் சந்தையில் பயன்படுத்தப்படாமல் உள்ள கடைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்யுமாறும் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து அரசியல் கட்சியினரைச் சந்தித்தும் சாலையோர வியாபாரிகள் முறையிட்டனா். எனினும், திட்டமிட்டபடி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் காந்தி காய்கனி சந்தை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனால், சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்த பலா், தங்களது உடைமைகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனா். சாலையோரத்திலிருந்து பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டதால், இந்தச் சாலை நெருக்கடி இல்லாமல் காட்சி அளித்தது.