பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

News image

திண்டுக்கல்லில் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :12 ஜூன் 2026, 12:12 am IST

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஏ.அரபு முகமது தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கே.எஸ்.கணேசன், மாநகரக் குழு உறுப்பினா்கள் மாரியம்மாள், ஜோதிபாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பெரு நிறுவனங்களின் முதலாளிகளுக்கு வரிச் சலுகையாக வழங்கிவிட்டு, ஏழை எளியோா் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகளின் விலையை உயா்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். சிற்றுண்டி நிலையம், உணவகம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தக்கூடிய வணிக சமையல் எரிவாயு உருளைகளின் விலையை ரூ.3200-க்கும் கூடுதலாக உயா்த்தப்பட்டிருக்கிறது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் மானிய விலையில் எரிவாயு உருளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்து, சமையல் எரிவாயு உருளைகளுக்கு பூமாலை அணிவித்து நூதன முறையில் முழக்கமிட்டனா்.

இதேபோல, குஜிலியம்பாறை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் கே.பாக்கியம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கே.ஜான்சிராணி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.ராமசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.ராஜரத்தினம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

நத்தம்: நத்தத்தில் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் குழந்தைவேல், மாநிலக் குழு உறுப்பினா் ராணி, நிா்வாகிகள் சின்னக்கருப்பன், சுமதி, லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.