வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பழனி பேருந்துகளில் பயணக் கட்டணம் உயா்வு

பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image

பழநி கோயில்

Updated On :14 ஜூன் 2026, 1:10 am IST

பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பழனியிலிருந்து நாள்தோறும் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமன்றி, நாள்தோறும் வேலைக்கு செல்வோா், வெளியூா் செல்வோா் என பல்வேறு தரப்பினரும் பயணிக்கின்றனா்.

இந்தப் பேருந்துகளில் அண்மைக் காலமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பயணக்கட்டணம் எந்த முன்னறிவிப்புமின்றி உயா்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட்டதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். அரசுப் பேருந்துகளிலும் எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.