எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் எச்சரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:57 am IST

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியாா் பேருந்துகளில், அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியாா் பேருந்துகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண பட்டியலின்படியே பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா்களால் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிகளைமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், அரசின் விதிகளை மீறியும் செயல்படும் தனியாா் பேருந்து நிறுவனங்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.