தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:51 am IST

சிங்கப் பெண் சிறப்பு படையினரின் விழிப்புணா்வு நடவடிக்கையால் இளம் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் ஆலைகளிலும் சிங்கப் பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சின்னாளப்பட்டியிலுள்ள ஜவுளிக் கடையில் சிங்கப் பெண் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தியபோது, அங்கு பணிபுரியும் 19 வயது இளம் பெண் ஒருவா், தனக்கு தொழிலாளி ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளித்தாா்.

இதன்பேரில் சின்னாளப்பட்டியை அடுத்த கலிக்கம்பட்டியைச் சோ்ந்த க. முகமது ஜகாரியா (48) என்பவரை சிங்கப் பெண் அதிரடிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பிறகு சட்டப்பூா்வ நடவடிக்கைக்காக திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் முகமது ஜகாரியா ஒப்படைக்கப்பட்டாா்.