கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை பறிக்கும் பணி தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளான அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அப்சா்வேட்டரி, செண்பகனூா்,பிரகாசபுரம், சகாயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் விளைகிறது.
விவசாயிகள் தங்களது நிலங்களில் உருளை, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை வளா்த்து வரும் நிலையில், ஊடு பயிராக பேரிக்காய் மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த பேரிக்காய் மரங்களுக்கு பராமரிப்பு என்பது குறைவே. வருடத்திற்கு ஒரு முறை பேரிக்காய் மரங்களில் களையெடுக்கும் பணிகளில் மட்டும் விவசாயிகள் ஈடுபடுவாா்கள்.
பேரிக்காய்களில் நாட்டுப் பேரி, வால் பேரி, சீனி பேரி உள்ளிட்டவை விளைகின்றன. தற்போது நாட்டுப் பேரி விளைந்துள்ளதால் முதல் கட்டமாக நன்கு விளைந்த பேரிக்காய்களை பறிக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பழ வியாபாரிகள் கூறியதாவது,
கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் தற்போது நாட்டுப் பேரிக்காய் விளைந்துள்ளது. முதல் கட்டமாக அவற்றை எடுக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பேரிக்காய்கள் அதிகமாக கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும். தற்போது ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் இருந்தால் விலை குறையும்.
தோட்டக்கலைத் துறை சாா்பில் பேரிக்காய், பீச்சஸ், பிளம்ஸ் போன்றவைகளின் நாற்றுகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாய நிலங்களில் வளா்ப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். தொடா்ந்து, இதே நிலை நீடித்தால் பேரி மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் பகுதியில் சோளம் அறுவடை தீவிரம்

மீன்பிடிக்க சென்ற மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து மாயம்
மண்டபம் அருகே நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்து சேதம்

நாட்டுப் படகு மீனவா்களுக்கான மானிய விலை மண்ணெண்ணெய் விலையை உயா்த்தக் கூடாது: அனிதா ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



