சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

News image

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நடைபெறும் நெல் அறுவடை.

Updated On :1 மே 2026, 1:38 am IST

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப் பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப் பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கா் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் ஆண்டுக்கு பத்தரை மாதங்கள் தண்ணீா் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.

அதன்படி தற்போது காலிங்கராயன் பாசனப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு கரை அருகே உள்ள பகுதியில் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. நன்கு விளைந்த பகுதிகளில் அறுவடை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மழையும், பாசன தண்ணீரும் இந்த ஆண்டு சீராக இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிா்கள் நல்ல வளா்ச்சி அடைந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு நெல் அறுவடை விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.