நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இளைஞா் வெட்டிக் கொலை

சிறுமலையில் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:26 am IST

சிறுமலையில் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (24). இவரது மனைவி நாகலட்சுமி (22). இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, நத்தம் அடுத்த வேலாயுதம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தன் (24) என்பவருக்கும் நாகலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிறுமலை பகுதியில் தோட்ட வேலைக்கு வந்து சென்றபோது ஏற்பட்ட இந்தப் பழக்கம், திருமணத்துக்குப் பின்னரும் நீடித்தது. இந்த தகாத உறவை அறிந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு வந்த அரவிந்தனை வெட்டிக் கொலை செய்தாா். சடலத்தை தாழைக்கிடை பிரிவு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் புதைத்தாா். இந்த நிலையில், தூா்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அரவிந்தனின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலையாளியான வீரமணியை கைது செய்து விசாரித்தனா்.