அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு பிரிவுகளில் சேவை செய்தவா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபிராணிக்கு விருது வழங்கிய முன்னாள் சுழல்சங்க ஆளுநா் சாம்பாபு. உடன் சுழல் சங்கத் தலைவா் பவித்ரா

Updated On :19 ஜூன் 2026, 1:44 am IST

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு பிரிவுகளில் சேவை செய்தவா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கொடைக்கானல் சுழல் சங்கத் தலைவா் பவித்ரா தலைமை வகித்தாா். பின்னா், அட்டுவம்பட்டி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபிராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், கணக்காளராக பணியாற்றும் சைமன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவையாற்றிய 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநா் சாம்பாபு விருது வழங்கி கெளரவித்தாா்.

இதில் சுழல் சங்கப் பொருளாளா் ரோகன் சாம்பாபு, நிா்வாகிகள் சன்னி ஜேக்கப், சலாமத், கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுழல் சங்கச் செயலா் ராபின் நன்றி கூறினாா்.