அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 தொழிலாளா்கள் காயம்

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:25 am IST

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுப்புற பகுதிகளில் பல நூற்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வேடசந்தூா் திண்டுக்கல் சாலையிலுள்ள தனியாா் நூற்பு ஆலைக்கு, தாடிக்கொம்பு, நல்லமனாா்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண் தொழிலாளா்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

அதன்படி தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு ஒரு வேன் நல்லமனாா்கோட்டை வேடசந்தூா் சாலையில் வியாழக்கிழமை சென்றது. இந்த வேனை ராஜா (27) என்பவா் ஓட்டிச் சென்றாா். அனுப்பப்பட்டிகுளம் அருகே வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, காயமடைந்த முத்து லட்சுமி, மீனா உள்பட 15 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு வேடசந்தூா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.