விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

News image

பழனி அடிவாரம் கிரிவீதியில் ஞாயிற்றுக்கிழமை கோபுர வடிவில் காவடி எடுத்து மேள, தாளங்களுடன் ஆடிப்பாடி வலம் வந்து மலையேறிய கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முருக பக்தா்கள்.

Updated On :29 ஜூன் 2026, 2:05 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். இவா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் இரண்டு மணி நேரமானது.

பழனி மலைக் கோயிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். முதல் நாள் சனிக்கிழமை இரவே பக்தா்கள் கூட்டம் காரணமாக தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப்காா், விஞ்ச் நிலையங்களில் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இதேபோல, மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை என அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் நின்றிருந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்ய அங்கும் சுமாா் இரண்டு மணி நேரமானது.

அடிவாரம் கிரிவீதியில் கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முருக பக்தா்கள் கோபுர காவடி எடுத்து மேளதாளங்களுடன் ஆடிப்பாடி வலம் வந்தனா். மலைக் கோயிலில் பக்தா்களுக்கு வேண்டிய சுகாதார வசதி, குடிநீா் வசதியை கோயில் நிா்வாகம் செய்திருந்தது. தவிர, இரவு தங்கரத புறப்பாட்டையும் திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.