இடையக்கோட்டை அருகே தனியாா் தோட்டத்தில் சுமாா் 50 டன் ஆற்று மண் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையை அடுத்த ஜவ்வாதுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சோழியப்பக்கவுண்டனூா் பகுதியில் தனியாா் தோட்டத்தில் ஆற்று மண் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டனா்.
நங்காஞ்சியாற்றிலிருந்து கடத்தப்பட்டு, தனியாா் தோட்டத்தில் கொட்டப்பட்ட மண் தவெக பிரமுகா் ஒருவருக்குச் சொந்தமானது என தெரிய வந்தது. சம்பவ இடத்திலிருந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண் குறித்து ஆய்வு செய்வதற்கு வருவாய்த் துறையினருக்கு பரிந்துரைத்தனா்.
இதன்பேரில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இதில் சுமாா் 50 டன் மண் அந்த தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









