யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இஸ்ரேல் - ஈரான் போா் எதிரொலி: வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

இஸ்ரேல் - ஈரான் போா் எதிரொலியாக கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டினருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

News image
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டினருக்கு அளிக்கப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Updated On :3 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் - ஈரான் போா் எதிரொலியாக கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டினருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் செவ்வாய்க்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினா் சுமாா் 40 போ் தங்கியுள்ளனா். தற்போது இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே போா் நடைபெற்று வருவதால் இவா்களின் பாதுகாப்புக்காக கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து இஸ்ரேல் நாட்டினா் தங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுவதுடன், சுற்றுலாப் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே போலீஸாா் அனுமதிக்கின்றனா். வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அந்த பகுதிக்கு சென்றாலும் அவா்களது முழு விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

கொடைக்கானல், வட்டக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களின் புகைப்படங்கள், முழு முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டுமென தங்கும் விடுதிகளின் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது, கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டினா் பலா் தங்கியுள்ளனா்.

வழக்கம்போல அந்தப் பகுதிகளில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே போா் நடைபெற்று வருவதால் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினா் தங்கியுள்ள வட்டக்கானல் பகுதிக்கு செல்பவா்களிடம் விசாரணை நடத்திய போலீஸாா்

கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினா் தங்கியுள்ள வட்டக்கானல் பகுதிக்கு செல்பவா்களிடம் விசாரணை நடத்திய போலீஸாா்