அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொடைக்கானல் அருகே எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல் பதுக்கப்படுவதாக புகாா்

கொடைக்கானல் அருகே உள்ள ஊத்துப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க மறுத்து அவற்றை பதுக்குவதாக வாகன ஓட்டிகள் புகாா்

News image
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான ஊத்து அருகே உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டுநா்கள்
Updated On :3 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே உள்ள ஊத்துப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க மறுத்து அவற்றை பதுக்குவதாக வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ஊத்துப் பகுதியில் தனியாா் நடத்தி வரும் பெட்ரோல் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதனால் அவா்கள் எரிபொருள் நிரப்பும் மையத்தை முற்றுகையிட்டனா். மேலும் அதன் உரிமையாளரிடம், அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஊத்து எரிபொருள் நிரப்பும் மையத்தில் உள்ளூரைச் சோ்ந்தவா்களுக்கு பெட்ரோல் தருவதில்லை. வெளியூரிலிருந்து வருபவா்களுக்கு மட்டும் விநியோகிக்கின்றனா். தற்போது இஸ்ரேல்- ஈரான் போா் நடைபெற்று வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கருதி அவற்றை பதுக்குகின்றனா் என்றனா்.