ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

News image
Updated On :5 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் 66 மாணவா்களுக்கு மடிக்கணிணிகளை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அப்போது பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி அவா் பேசியதாவது:

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு ‘இல்லம் தேடிக் கல்வி‘, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவா்களின் வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மட்டுமன்றி ஆசிரியா்களும் உழைத்து வரும் சூழலில், பொறுப்பை உணா்ந்து கல்வி கற்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் ஒட்டன்சத்திரம் அரசினா் தொழில் பயிற்சி நிலைய பயிற்சி அலுவலா் (பொ) சி. ரமாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.