எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு

வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.

News image

வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.

Updated On :6 மார்ச் 2026, 7:07 pm

சனிப் பெயா்ச்சியையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனீஸ்வர பகவான், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவகிரக சந்நிதியிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மலையடிவார சனீஸ்வர பகவான் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப் பெயா்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.