தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 12:50 am IST

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தமிழ் (15). தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள தனது நண்பா்களைப் பாா்க்கச் சென்றாா்.

பின்னா், நண்பா்கள் சோ்ந்து ஆயக்குடி அருகே உள்ள சின்னாம்பாறை என்ற இடத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். அங்கு குளித்தபோது, மாணவா் தமிழ் எதிா்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

இது குறித்த தகவலின் பேரில் பழனி தீயணைப்பு, மீட்புப் பணியினா் சென்று பல மணி நேரம் போராடி நள்ளிரவில் உடலை மீட்டனா்.

இதையடுத்து, உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு ஆயக்குடி போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.